Dec 03, 2016

ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமான சேவையை தனியார் மயப்படுத்த எதிர்ப்பு

வரவு– செலவு திட்டத்தின் குழு நிலை விவாதத்தின் போது ஐ.ம.சு.மு ஒன்றிணைந்த எதிரணி எம்.பி. மஹிந்தானந்த அளுத்கமகே ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமான சேவையை தனியார் மயப்படுத்த வேண்டாம் என்று தெரிவித்தார்.

இதுபற்றி அவர் கூறுகையில், ''ஸ்ரீலங்கா எயார் லைன் விமான சேவையை தனியார் மயப்படுத்தும் வேலைத்திட்டம் அரசினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மிஹின் லங்கா நிறுவனம் இறுதி தருவாயில் இலாபம் ஈட்டி வந்தது. அதன் சேவையையும் நிறுத்தியுள்ளனர்.

ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் மூலம் நாட்டுக்கு வருமானம் கிடைத்ததுள்ளது.
அரச உடைமைகளை விற்க வேண்டாம். இதனை வைத்து இலாபம் ஈட்டுங்கள்.

ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் நிறுவனம் எமது உடைமை . இதனால் எமக்கு பெருமை''. என்று வலியுறுத்தினார்

string(1) "1"
Top