Dec 03, 2016

நீதிமன்ற உத்தரவினை கிழித்தெறிந்த ஞானசார தேரர் Featured

மட்டக்களப்பிலுள்ள மங்களராம விஹாரைக்கு பொதுபல சேனா அமைப்பின் ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் வருகை தர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது


இதனை அறிந்தவர்கள் இனவெறுப்பை தூண்டும் நிகழ்வுகள் இடம்பெறக்கூடும் என்றுணர்ந்து இந்த வருகையை தடை செய்யுமாறு நீதிமன்ற உத்தரவினை பெற்றிருந்தனர்
இந்த உத்தரவையும் மீறி பொதுபலசேனா உள்ளிட்ட பௌத்த அமைப்புக்கள் பல இன்று மட்டக்களப்பு நோக்கி சென்றனர்.
பாதுகாப்பு காரணம் கருதி வெலிகந்தை பகுதியில் வைத்து பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர்.
ஆனால் அதனை ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் ஏற்கவில்லை
''மட்டக்களப்பு பௌத்த மக்கள் நான் போதி பூஜை நடத்த வேண்டும் என ஆசைப்படுகின்றார்கள்.
அதற்காக நாங்கள் செல்கின்றோம். அது முடிந்ததும் நாங்கள் அங்கிருந்து வெளியேறி விடுவோம். எங்களுக்கு வழிவிடுங்கள். எங்களால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
நாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட செல்லவில்லை. அவ்வாறு எதுவும் நடப்பின் பொலிஸ் அதிகாரிகள் அவற்றை பார்த்துக் கொள்ளுங்கள்.'' என்று கூறினார்
ஆனால் நீதிமன்ற உத்தரவை பொலிசார் காட்டவே அதனை கிழித்தெறிந்த ஞானசார தேரர் பொலிஸாருடன் வாக்குவாதத்திலும் ஈடுப்பட்டார்.
இதனால் அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது.

string(1) "1"
Top