Dec 04, 2016

சர்வதேச குழந்தைகள் அமைதி விருது

நெதர்லாந்தின் ஹேக் நகரில் நடந்த விழாவில் 2016ம் ஆண்டுக்கான சர்வதேச குழந்தைகள் அமைதி விருது நேற்று வழங்கப்பட்டது.


உலகளவில் குழந்தைகளின் அரிய பணிகளை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விருது,இம்முறை
இந்திய வம்சாவளியை சேர்ந்த ஐக்கிய அரபு எமிரேட்சில் வசிக்கும் கேஹ்காசன் பாசுவிற்கு வழங்கப்பட்டது.
இவர் சுற்றுச்சூழல் ஆர்வலர்.
இவர் 12 வயதிலேயே 'கிரீன் ஹோப்' என்ற பசுமை அமைப்பை நிறுவி, இயற்கை பாதுகாப்பு தொடர்பான பல்வேறு பணிகளை செயல்படுத்தி வருகிறார்.
4 ஆண்டுகளில் கொலம்பியா, பிரான்ஸ், மெக்சிகோ, நேபாளம், ஓமன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் 5000 மரங்களை நட்டுள்ளார்.
இதில் 1000 தன்னார்வலர்கள் பணிபுரிகின்றனர்.
10 நாடுகளில் இவரது அமைப்பு செயல்படுகிறது.
இளம் வயதிலேயே இவர் ஆற்றிய பணிகளை பாராட்டியே இந்த விருது வழங்கப்பட்டது.

string(1) "1"
Top