Dec 05, 2016

பணிப்பகிஷ்கரிப்பால் அரசுக்கு கிடைத்த வருமானம் Featured

கடந்த வெள்ளிக்கிழமை தனியார் பேருந்து சங்கத்தினர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.


அந்த நாட்களில் 6,700 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும்
அதன் மூலம் 219 மில்லியன் ரூபா வருமானாமாக கிடைத்துள்ளது எனவும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன தெரிவித்தார்.


வெள்ளிக்கிழமை 120 மில்லியன் ரூபாவும் சனிக்கிழமை 99 மில்லியன் ரூபா வருமானமும் கிடைத்துள்ளதாம்.
வழமையாக வார நாட்களில் கிடைக்கும் வருமானத்தை விட 66 வீதம் அதிகமான வருமானம் இது என்பதையும் குறிப்பிட்டார்.

இலங்கை போக்குவரத்து சபை வரலாற்றில் இருநாட்களில் ஈட்டப்பட்ட அதிக் கூடிய வருமானம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வருமானத்தின் மூலம் இலங்கை போக்குவரத்து சபைக்கு மேலும் 1250 பஸ்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கை

ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.

 

string(1) "1"
Top