Dec 05, 2016

டெங்குவிற்கான அபராத தொகை 25,௦௦௦ஆக அதிகரிக்க தீர்மானம் !!! Featured

டெங்கு நோயை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் குறித்து ஆராயும் பொருட்டு கம்பஹா சுகாதார சேவை பணிமலைக்கு நேற்று விஜயம் செய்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன,

நுளம்புகள் பெருகும் வகையில் சுற்றுச்சூழலை வைத்திருக்கும் நபர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை 25,000 ரூபாய் வரை அதிகரிக்க எண்ணியுள்ளதாகவும்
ஆகவே குடியிருப்பாளர்கள் தமது சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறும் தெரிவித்தார்.

தற்போது டெங்கு நுளம்பு பெருக்கத்திற்கு 2 000 தொடக்கம் 5 000 ரூபா வரையில் அபராதம் விதிக்கப்படுகிறது .

கடந்த பத்து மாதக்காலப்பகுதியில் 46236 டெங்கு நோயாளர்கள் நாடு முழுவதிலும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
அதிக தொகையிலான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் இணங்காணப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது .
கடந்த 10 மாத காலப்பகுதியில் நாடு முழுவதிலும் 46236 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

string(1) "1"
Top