Dec 05, 2016

ஆபத்தான கட்டத்தில் ஜெயலலிதா!!!

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி ஜெயலலிதா, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சைக்கு பின்னர் முதல்வரின் உடல்நிலை தேறி வந்த நிலையில் நேற்று மாலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து உடனடியாக அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
ஜெயலலிதா, தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும்,சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

string(1) "1"
Top