Dec 06, 2016

இன்று, ஜெயலலிதா உடல் நல்லடக்கம்

கடந்த செப்டம்பர் மாதம் 22 ம் திகதி  இரவு காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு கொண்டதாக திடீர் உடல்நலக்குறைவால்,


சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் உடல் நிலை தேறிவருவதாகவும் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பியெல் வருகை தந்துள்ளதாகவும் கூறினார்கள்
நுரையீரலில் இருக்கும் அடைப்புகளை நீக்குவதற்கான சிகிச்சையும் பிஸியோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
அதையடுத்து உடல்நிலை தேறிவருவதாக அப்போலோ மருத்துவர்கள் சொல்லிவந்த நிலையில்
நேற்று திடீரென அவருக்கு இதயத்துடிப்பில் சிக்கல் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இரவு 11.30 மணியளவில் இயற்கை எய்தினார் என்று
அப்போ மருத்துவமனையினர் அறிவித்தனர்

இதையடுத்து அவரது மறைவுக்கு குடியரசுத்தலைவர், பிரதமர், பிற மாநில முதல்வர்கள், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள்,
பொதுமக்கள் உள்பட நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜெயலலிதா மறைவை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் 7 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறையும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவரது உடல் போயஸ் கார்டனுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதி சடங்குகள் நடைபெற்றன .
பின்னர், அங்கிருந்து ராஜாஜி ஹாலுக்கு ஜெயலலிதா உடல் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது
ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றுக்கொண்டார்.
அவருக்குத் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
ஓ.பன்னீர்செல்வத்தைத் தொடர்ந்து, மற்ற அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.
பதவி ஏற்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து, அங்கேயே தமிழக முதலமைச்சராக இருந்த மறைந்த ஜெயலலிதாவுக்கு
ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து இன்று மாலை 4.30 மணியளவில் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள
எம்.ஜி.ஆர் நினைவிட வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது

string(1) "1"
Top