Dec 07, 2016

இலங்கையில் புதிய அமெரிக்கத் தூதரக நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம்

இலங்கையுடனான நட்புறவின் மற்றுமொரு அடையாளமாக,

அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷப் மற்றும் Bureau of Overseas Buildings Operations (OBO) இன் முதனிலை பிரதி பணிப்பாளர் வில்லியம் மோசர் ஆகியோர்

உள்ளக அதிகாரிகள் ஆகியோரால் இலங்கையின் கொழும்பில் புதிய அமெரிக்கத் தூதரக கட்டடத்திற்கான அடிக்கல் நட்டு வைக்கப்பட்டது.

இந்த பன்முக கட்டடத் தொகுதியானது தற்போதைய தூதரகப் பகுதியுடன், அயலில் இருக்கும் காணியுடன் இணைந்ததாக பரவலாக்கப்பட்டு நிர்மாணிக்கப்படவுள்ளது. 5.7 ஏக்கர் பரப்பளவு கொண்ட புதிய கட்டடமானது தூதரகம், மரய்ன் பாதுகாப்பு காவலர் இருப்பிடம், துணை கட்டடங்கள் மற்றும் தூதரக ஊழியர்களுக்கான வசதிகளை உள்ளடக்கியிருக்கும். பாதுகாப்பான,நிலைபேறான மற்றும் நவீன வேலைத்தளத்தை தூதரகத்தின் ஊழியர்களுக்கு அது வழங்கும்.

 

அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தின் போர்ட்லன்ட் நகரின் ZGF Architects, LLP ஆனது வடிவமைப்பு கட்டட வரைகலைஞர்களாகவும், வாஷிங்டனின், ஸ்போகென் நகரில் உள்ள Integrus Architecture ஆனது கட்டட நிர்மாணத்திற்கான கட்ட வரைகலைஞர்களாகவும் பணியாற்றுவதுடன், அலபாமா மாநிலத்தின், மொன்ட்கோமெரி நகரத்தைச் சேர்ந்த Caddell Construction ஆனது கட்டடத்தை நிர்மாணிக்கவுள்ளது.

 

1999ஆம் ஆண்டு முதல், Department's Capital Security Construction Programஇன் அங்கமாக,OBO ஆனது புதிதாக 133 புதிய தூதரக நிர்மாணங்களை நிறைவு செய்துள்ளதுடன், மேலதிகமாக 52 செயற்றிட்டங்களையும் வடிவமைப்பு மற்றும் நிர்மாணித்தல் நிலையில் உள்ளன.

 

அமைந்துள்ள தேசத்தில் பாதுகாப்பான, மற்றும் செயற்பாட்டு நிலையிலுள்ள அமெரிக்க அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்யும் கட்டட வசதிகளை வழங்குவதும், அமெரிக்க வெளிவிவகார கொள்கை குறிக்கோள்களை எட்டுவதற்கு எமது ஊழியர்களுக்கு ஆதரவளிப்பதும் OBO இன் நோக்கமாகும். ஆமெரிக்க விழுமியங்களை இந்த கட்டடங்கள் பிரதிபலிப்பதுடன், அமெரிக்கக் கட்டடக் கலை, பொறியியல், தொழில்நுட்பம், நிலைபேறு தன்மை, கலை, கலாசாரம் மற்றம் நிர்மாணம் வெளிப்படுத்தல் என்பவற்றை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.

usb1

string(1) "1"
Top