Dec 07, 2016

எம்.ஜி.ஆர். சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டார் ஜெயலலிதா!

கடந்த 05ம் திகதி இரவு 11.30 மணி அலவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்.


நேற்று முழுவதும் ராஜாஜி அரங்கத்தில், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பார்வைக்காக அவரது உடல் வைக்கப்பட்டது.
4.30 மணியளவில் ராஜாஜி அரங்கத்தில் இருந்து மெரினா கடற்கரை நோக்கி ஜெயலலிதா கொண்டு வரப்பட்டார்.
ராஜாஜி அரங்கில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலை
முப்படை வீரர்கள், எம்.ஜி.ஆர் நினைவிடத்துக்குக் கொண்டு வந்து வீர வணக்கம் செலுத்தினர்.
ஜெயலலிதாவின் உடல், 'புரட்சித் தலைவி செல்வி ஜெ. ஜெயலலிதா' என தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்ட
சந்தனப் பேழையில் வைக்கப்பட்டது.
ஜெயலலிதாவின் உடல் மீது போர்த்தியிருந்த தேசியக் கொடியை அவரது தோழி சசிகலா பெற்றுக் கொண்டார்.
அவரது உடலுக்கு சசிகலா இறுதிச் சடங்குகளை செய்தார்.
மாலை 6.00 மணிக்கு, எம்.ஜி.ஆர் சமாதி அருகே அரசு மரியாதையுடன்
குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.
இலட்சக்கணக்கான தமிழக மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

184428

 

184431

184432

 

184434

184442

184497

184495

 

string(1) "1"
Top