Dec 07, 2016

யாழ்.நூலகம் எரிப்பு :மன்னிப்பு கோரிய பிரதமர் Featured

நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் பேசும்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,


1981ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியின் போது,
யாழ். நுாலகம் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தான் மன்னிப்புக் கோருவதாக கூறினார் .

சிறைச்சாலைகள் மற்றும் மறுசிரமைப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு
பேசுகையில் இவ்வாறு பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாக திகழ்ந்த யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது
இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

string(1) "1"
Top