Dec 07, 2016

ஹிருணிகாவிற்கு பதிலளித்த துமிந்தவின் சகோதரி Featured

நாடாளுமன்றத்தில், நேற்று இடம்பெற்ற, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு,


மீள்குடியேற்றம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஹிருணிகா பிரேமசந்திர துமிந்த சில்வா பற்றிய கருத்துக்களை தெரிவித்தார்
''கையில் பணம் இல்லாத கைதிகள் பலர், சிறைச்சாலைகளில் பல்வேறான சிரமங்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
பணம் படைத்தவர்கள் சுகபோக வாழ்வை அனுபவிகின்றனர்.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதியான துமிந்த சில்வா,
சிறையில் சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்.
டிசெம்பர் 3ஆம் திகதி அவருடைய பிறந்தநாள் கொண்டாட்டம்,
சிறைச்சாலையிலேயே அதுவும் குடும்பத்தாருடன் இடம்பெற்றது என்றும் குறிப்பிட்டார்
இதற்கு தனது முகப்புத்தகத்தில் பதிலளித்துள்ளார் துமிந்த சில்வாவின் சகோதரி திலினி ஆன் சில்வா
''துமிந்த சில்வா தலையில் 2 குண்டுகள் பாய்ந்துள்ளது .முதலாவது அறுவை சிகிச்சை ஸ்ரீ ஜெயவர்த்தன புர வைத்தியசாலையில் நடைபெற்றது
அடுத்தடுத்த அறுவை சிகிச்சைகள் சிங்கப்பூரில் நடைபெற்றது.இத்தனை அறுவை சிகிச்சைகளுக்கு பின்னரும் உயிர் தப்பியமை பெரும் ஆச்சர்யம்
சகல ஆவணங்களும் மருத்துவர்கள் கொடுத்துள்ளனர்.ஆதாரமற்று பேசுவது முறையல்ல'' என்று தனது முகப்புத்தகத்தில் கருத்துப்பதிவு செய்துள்ளார்

 

Dili Hiru3 600px 16 12 07

string(1) "1"
Top