Dec 08, 2016

முஸ்லீம்களின் கலாசாரத்தை அரசாங்கம் மாற்றாது Featured

நேற்று நாடாளுமன்றத்தில் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில்

முஸ்லீம்களின் கலாசாரத்தை பற்றி அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கேள்விகள் கேட்கப்பட்டது.

" கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை எழுதச்சென்ற முஸ்லிம் மாணவர்கள் மற்றும் மாணவிகளை,

அங்கிருந்த மேற்பார்வையாளர், பர்தா, ஹிஜாப்பை கழற்றி விட்டு வருமாறும்,

தாடியை எடுத்து விட்டு வருமாறும் இல்லையேல் பரீட்சை எழுதுவதற்குத் தடை விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் பாடசாலைக்கு சென்ற முஸ்லிம் ஆசிரியர்களை, பர்தா அணிய வேண்டாம் என்றும்

அதற்கு பதிலாக சேலை அணிந்துக்கொண்டு வருமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது
இது அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட உத்தரவா?" என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் அமைச்சர் ராஜித சேனாரத்ன, "இது அரசாங்கத்தின் முடிவு அல்ல

எப்போதும் முஸ்லீம்களின் கலாசாரத்தை அரசாங்கம் மாற்றாது.

இது தொடர்பான முறைப்பாடு கிடைத்தால், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்’’. என்று தெரிவித்தார்

string(1) "1"
Top