Dec 08, 2016

அனைவரின் அங்கீகாரத்துடன் எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் Featured

நாடாளுமன்றத்தில் சர்வதேசவர்த்தகஅமைச்சு மற்றும் அதன் நடவடிக்கைகள் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது

ஜனாதிபதி எட்கா ஒப்பந்தம் பற்றி கூறினார்

‘’இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக உடன்படிக்கை எட்கா தொடர்பாக

நாட்டு மக்களுக்கு தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம்.

தவறான தகவல்களை ஆதாரமாக கொண்டு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

மக்களை தவறாக வழிநடத்தும் கருத்துக்கள் தொடர்பாக  நான் கவலையடைகிறேன்.

எட்கா ஒப்பந்தம் ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கு முன்னதாக

அதனை அமைச்சரவைக்கு சமர்ப்பித்து அங்கீகாரம் பெறப்படும்.

அதன் பின்னர் அந்த ஒப்பந்த்தை நாடாளுமன்றத்துக்கு சமர்பிக்கப்படும்.

அதில் ஏற்றுக்கொள்ள முடியாத விடயங்கள் இருப்பின் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

அதன் பின்னர்  அனைவரும் ஏற்றுக்கொண்ட பின்னரே கைச்சாத்திடப்படும் என்பதை நான் உறுதியாக கூறுகின்றேன்.

எமது பொருளாதார முன்னேற்றம் தொடர்பாக சகல நாடுகளுடனும் ஒப்பந்தங்களையும் ஒத்துழைப்புகளையும்

ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

மேலும் எதிர்காலத்தில் பல நாடுகளுடன் ஒப்பந்தங்களை செய்வதற்கு எதிர்பார்த்துள்ளோம்.’’என்று கூறினார்

string(1) "1"
Top