Dec 09, 2016

முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதை யாராலும் தடுக்க முடியாது-அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

நேற்று, நாடாளுமன்றத்தில் சமய அலுவல்கள் மற்றும் தபால் சேவைகள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதம் நடைபெற்றது.


இதில் முஸ்லீம் சமூகத்தினை பற்றி பேசிய புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்

'நாட்டில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் உள்ளிட்ட பலர்
இஸ்லாம், அல்குர்ஆன் மற்றும் அல்லாஹ் தொடர்பாக மிகவும் கீழ்த்தரமான கேவலமான பிரசாரங்களை செய்து வருகின்றனர்.
தொடர்ந்து இதுபோல நடந்தால் முஸ்லிம் இளைஞர்கள்
ஆயுதம் ஏந்துவதை யாராலும் தடுக்க முடியாது போய்விடும். என்று கூறினார்.

இது தொடர்பாக மேலும் கூறுகையில்... ''இனவாதம் பேசுபவர்களை கைது செய்ய வேண்டும் என்று
முஸ்லிம் எம்.பிக்கள் அனைவரும் இணைந்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்தோம்.
அந்த கடிதத்துக்கு உரிய நடவடிக்கை இதுவரை எடுக்கபடவில்லை.
உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லிம்கள் அனைவருக்கும் ஒரே கலாசாரம் தான்
முஸ்லிம்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை ஷரீயா சட்டம் வரையறுத்துள்ளது
உலகத்தில் நாங்கள் வாழ்வதே இந்த மார்க்கத்துக்காகத்தான்.
இந்த மார்க்கத்தை பின்பற்றக் கூடாது என தடைவிதிப்பார்களாயின்
அவர்களுக்கு எதிராக நாங்கள் யுத்தம் செய்தாக வேண்டும் என மார்க்கம் கூறுகின்றது.
எமது மார்க்க விடயங்களில் எவருக்கும் தலையிட முடியாது
இஸ்லாமும், குர்ஆனும், அல்லாஹ் தொடர்பில் தொடர்ந்தும் விமர்சிக்கப்படும் போது
முஸ்லிம் இளைஞர்களை எம்மால் கட்டுப்படுத்த முடியாது போய்விடும்
இது தொடர்ந்தால் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதை யாராலும் தடுக்க முடியாது போய்விடும்.
நாட்டின் அனைத்து தேசிய பிரச்சினைகளிலும் நாங்களும் பங்கு கொண்டுள்ளோம். எனவே
சகல இன மக்களும் சுகந்திரமகவும் நிம்மதியாகவும் வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார் .

string(1) "1"
Top