Dec 09, 2016

பௌத்த தேரர்கள் விடயத்தில் சட்டம் பாரபட்சமற்று செயற்பட வேண்டும்

நேற்று, நாடாளுமன்றத்தில் சமய அலுவல்கள் மற்றும் தபால் சேவைகள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதம் நடைபெற்றபோது
அமைச்சர் ரிசாத் பதியூதீன்

''மட்டக்களப்பில் பிரச்சினையில் ஈடுபடும் பௌத்த தேரர் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் மீது அவமரியாதை செய்கிறார்.இனவாதத்தை தூண்டும் பௌத்த தேரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
அவர்களை கைது செய்வதற்கு பதிலாக அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் வெட்கத்துக்குரிய விடயமாகும்
அப்படியான சந்தர்ப்பங்களில் நாட்டில் சட்டம் என்பது சமநிலையில் இல்லை என்பது தெரிகிறது
இனி சட்டமானது பாரபட்சமின்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்'' என்று தெரிவித்தார்

string(1) "1"
Top