Dec 09, 2016

கடந்த ஆட்சியில் இனவாதத்துக்கு எதிராக பேசாத முஸ்லிம் அமைச்சர்கள் இப்போது பேசுவது ஏன்?-விஜயதாச ராஜபக்ஷ

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தின் போது முஸ்லீம் அமைச்சர்கள் தெரிவித்த கருத்துக்களுக்கு
பதிலளிக்கும் விதமாக பேசினார் நீதி மற்றும் பௌத்த விவகார அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ .

கடந்த அரசாங்கத்தில்,அளுத்கம பிரச்சினை இடம்பெற்ற போது எந்தவொரு முஸ்லிம் அமைச்சரும் அதற்கு எதிராக குரல் கொடுக்க முன்வரவில்லை.
அக்காலகட்டத்தில் இனவாதப் பிரச்சினைகளை உருவாக்கியவர்களுக்கும் அன்று தலைமை வகித்தவருக்கும்
எதிராக ஒரு வார்த்தை கூடபேசாத முஸ்லிம் அமைச்சர்கள் இன்று பேசுகிறார்கள்.
அக்காலகட்டத்தில் நானும், லக்ஷ்மன் கிரியெல்ல அமைச்சரும் மாத்திரமே அதற்கு எதிராக குரல் கொடுத்தோம்.
இங்கு பேசும் முஸ்லிம் அமைச்சர்களுக்கு இன, மத பிரச்சினைகள் ஒரு பொருட்டல்ல.
அவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படின் எந்தவொரு மோசமான வேலையையும் கண்டும் காணாது இருந்து விடுவார்கள்.''என்று பதிலளித்தார்

string(1) "1"
Top