Dec 11, 2016

ரயில் விபத்து :பல்கேரிய கிராமத்தின் பகுதிகள் அழிவு Featured

பல்கேரியாவின் வட கிழக்கில் வாயு கொண்டு சென்ற சரக்கு ரயில் ஒன்று வெடித்து சிதறியதில், அந்தபகுதியில் உள்ள கிராமத்தின் பகுதிகள் சேதமாக்கப்பட்டுள்ளன.


20க்கும் ,மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் இதுவரை 5 பேர் இறந்ததாகவும் கூறியுள்ளனர் ஆனால் முழுமையாக இறந்தோரின் எண்ணிக்கை தெரியவில்லை
800 மக்கள் வாழ்கின்ற ஹிட்டிரினோ கிராமத்தின் ரயில் நிலையத்தை கடந்து செல்கையில் இந்த ரயில் தடம்புரண்டுள்ளது.
அந்த ரயிலில் இருந்த சில வாயு கொள்கலன்கள் மின்கம்பிகளில் மோதியதால் அதற்கு உள்ளிருந்த வாயு தீப்பற்றி எரிந்திருக்கிறது
மக்கள் உறக்கத்திலிருந்த போது அருகிலிருந்த வீடுகளில் தீ பரவியதால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது
உயிர் தப்பிய ரயில் ஓட்டுநர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

 

string(1) "1"
Top