Dec 11, 2016

127 கிலோ தங்கம், 100 கோடி ரூபாய் பணம் மீட்பு

திருப்பதி தேவஸ்தான அறக்காவலர் உறுப்பினர் பொறுப்பில் இருந்தவர் சேகர் ரெட்டி

சென்னையில் வசித்து வரும் சேகர் ரெட்டி, தமிழக பொதுப்பணித்துறை பணிகளை கான்ட்ராக்ட் எடுத்து செய்து வந்தார்.
மணல் குவாரிகளில் மணல் அள்ளும் பணியையும் மேற்கொண்டு வந்தார்.
தமிழக அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் பலருடன் நெருக்கமானவர்.
இவரது வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினார்கள் .
இவரது சென்னை மற்றும் வேலூர் வீடுகளிலும், இவரது உறவினர் வீடுகளிலும் கடந்த சில நாட்களாக சோதனை நடத்தி,
127 கிலோ தங்கம், 100 கோடி ரூபாய் பணம் மற்றும் பல்வேறு முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ரொக்க பணத்தில், 10 கோடி ரூபாய் அளவுக்கு புதிய நோட்டுக்கள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
வருமான வரித்துறை சோதனைக்கு பிறகு, அறக்காவலர் உறுப்பினர் பொறுப்பில் இருந்து சேகர் ரெட்டியை நீக்கியுள்ளனர்.

string(1) "1"
Top