Dec 12, 2016

ஹம்பாந்தோட்டை ஊழியர்கள் மீதான தாக்குதல்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நேற்று இடம்பெற்ற குழப்பநிலையின் போது,

ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் எழுந்தவண்ணம் உள்ளன


இத்தாக்குதலை ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது என அறிக்கை விடுத்துள்ளது.அரசாங்கம் மனிதாபிமானமற்ற முறையைக் கையாண்டது எனவும்
ஆயுதத்தினால் தடுப்பது எந்த வகையிலும் நியாயமற்றது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பம் தொடர்பில் அரசாங்கம் முழுமையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஒழுங்கு முறைகளை குறித்த ஊடகவியலாளர் மீறியமையே இச்சம்பவம் இடம்பெறுவதற்கான அடிப்படை என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது என அரசு தரப்பு செய்தியில் கூறப்படுகிறது
இதுபற்றி பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி கருத்து தெரிவிக்கையில் எந்தவொரு ஊடகவியலாளருக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்படவில்லை என கடற்படைத் தளபதி கூறியதாகவும் தெரிவித்தார்

string(1) "1"
Top