Dec 12, 2016

இணையதள செய்திகளை கட்டுப்படுத்த சட்டம் உருவாக்கப்படவேண்டும் -பிரதமர் Featured

வெலிமட பிரதேசத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் உரையாற்றுகையில்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணையதள செய்திகள் தொடர்பாக கருத்து தெரிவித்தார் .


''நாட்டில் ஒற்றுமையையும் சமாதானத்தையும் நிலைநிறுத்த சில புதிய சட்டங்கள் தேவை
ஊடகங்கள் எனும் போது வானொலி தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை என்பவற்றில் வரும் செய்திகள் அரசின் கட்டுபாட்டுக்கு உட்பட்டே வருகின்றன
ஆனால் இணைய தள செய்திகள் அப்படியல்ல
சமுக வலைதளங்களில் எப்படிப்பட்ட செய்தியையும் எந்த விதத்திலும் தரக்கூடியதாக உள்ள நிலையில்
அவை தனி நபர்களை பாதிக்கும் விதத்தில் இருப்பின் அவற்றை கட்டுபடுத்தும் நிலை இருக்க வேண்டும்
அதற்கான சட்டங்கள் உருவாக்கப்படவேண்டும்'' என்று கூறினார்
இதனால் விரைவில் இணையதள செய்திகளை கட்டுப்படுத்துவதற்கான சட்டங்கள் உருவாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

string(1) "1"
Top