Dec 13, 2016

அரசாங்கச் சொத்துக்கள் தனியார் மயமாக்கப்படாது-ரவி கருணாநாயக்க Featured

2017ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் அரசாங்கச் சொத்துக்கள் தனியார் மயமாக்கப்பட அல்லது விற்கப்பட கூடிய

எந்த திட்டங்களும் ஆலோசனைகளும் இல்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டுக் கடன்களை பங்குகளாக்கி, மக்களின் கடன் சுமையை குறைப்பதற்கே திட்டங்கள் உண்டு
இதன் மூலம் நாட்டை ஒரு பேரளவு உற்பத்திப் பொருளாதார மையமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்யவே
தீர்மானித்துள்ளோம் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

''வரி விடுமுறைகள் சலுகைகள் வட்டியில்லாக் கடன்கள் என்பவற்றை உள்ளடக்கியுள்ளது வரவு செலவு திட்டம்

மேலும், நமக்கிருந்த கடன்களினால் அரசாங்கம் பெரியளவில் இடர்பாட்டை எதிர்நோக்கியது.
இதனால் 2014ஆம் ஆண்டளவில் மொத்த தேசிய உற்பத்தி 11 சதவீதமாக அரச வருமானம் குறைந்தது.
ஆனால் இப்போது வரி அறவிடுவதில் ஊழல் நீக்கப்பட்டு, செயற்றிறன் அதிகரித்தமையால்
மொத்த தேசிய உற்பத்தி 13.6 சதவீதம் எனும் அளவுக்கு இறைவரி அறவீடு அதிகரித்துள்ளது.''என்றார்.

 

string(1) "1"
Top