Dec 14, 2016

உலக பிரபல பெட்டரி டான்ஸ் நடனக்குழு இலங்கை வருகை

உலகின் பிரபலமான நடனக் குழுவான பெட்டரி டான்ஸ் நடனக் குழுவானது, இலங்கைக்கான தமது விஜயத்தை ‘டிரம்ஸ் அன்ட் டான்ஸ்’ நிகழ்வுடன் நிறைவு செய்யவுள்ளது.

இந்த நிகழ்வானது டான்ஸர்ஸ் கில்ட்டைச் சேர்ந்த சந்தன விக்ரமசிங்க மற்றும் நாட்ரோவைச் சேர்ந்த அசோக்க விக்ரமரட்ன ஆகியோருடன் இணைந்து டிசம்பர் 12ஆம் திகதி பிற்பகல் 7 மணியளவில் கொழும்பு பிஷப் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இலங்கையின் முன்னணி நடன நிறுவனங்களுடன் பரிமாற்ற நிகழ்ச்சிகள், சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் உள்ளுர் மாணவர்களுடன் பயிற்சி செயலமர்வுகள் என்பவற்றுடன் பெட்டரி டான்ஸ் நடனக் குழுவின் இரண்டு வார பொது நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன.

“எமது இரண்டு நாடுகளுக்கும் இடையில் மக்களுக்கு இடையிலான உறுதியான கலாசார பிணைப்பினை வெளிப்படுத்துவதற்கு பெட்டரி டான்ஸ் நடனக் குழுவை கொண்டு வருவதற்கு அமெரிக்கத் தூதரகம் பெருமை கொள்கின்றது” என அமெரிக்கத் தூதரகத்தின் பதில் தூதுவர் ரொபர்ட் ஹில்டன் தெரிவித்தார்.


கடந்த 40 வருடங்களில்ää 62 நாடுகளில் நியூயோர்க்கை தலைமையகமாகக் கொண்ட இந்த நடனக் குழுவானது வன்முறைகள் மற்றும் இன மோதல்களால் பாதிக்கப்பட்ட பல இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. கலை நிபுணத்துவத்தினை முன்னிறுத்துவதற்கும், நாளைய இளம் தலைவர்களை விதைத்தல்ம,ற்றும் ஒவ்வொருவருக்கும் நடனத்தை அணுகச் செய்தல் என்பதற்காக ‘இணைப்பதற்கான நடனமாடல்’ என்ற அதன் தார்மீகக் கொள்கையானது பணியாற்றி வருகின்றது.

danceus

மக்கள் தமது கலைத்துவத்தை பரவலாக்கிக் கொள்வதற்கான பெரும் சந்தர்ப்பமாக மாத்திரமன்றி, தூதரகத்தின் கலாசார இராஜதந்திரத்தின் ஒரு அம்சமாகவும் இருப்பதாக பெட்டரி டான்ஸ் நடனக் குழுவின் வருகையை பதில் தூதுவர் ஹில்டன் குறிப்பிட்டார். “இலங்கையர்களைப் போன்றே ஐக்கிய, ஜனநாயக மற்றும் உள்ளடக்கமான தேசம் என்ற அதே உணர்வினையும் நாம் பகிர்ந்து கொள்கின்றோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.


இந்த விஜயத்தின் போது,நெட்ஃபெட்ஸ்ட் நடன நிகழ்ச்சியில் ‘ராக் துர்கா’ என்ற அடையாள நிகழ்வை அவர்கள் அரங்கேற்றியதுடன்., சித்ரசேன நடனக் கல்லூரிக்கான ஆற்றுலைகளுக்கான செயலமர்வுகளையும் நடத்தினர். கண்டிக்கு வஜியம் செய்த பெட்டரி டான்ஸ் குழுவானது, கேட்வே கல்லூரியில் இலவச ஆற்றுகையையும், பேராதனை பல்கலைக்கழக மாணவர்களுக்கான இலவச வகுப்புக்களையும் நடத்தினர். இறுதியாக, கலையின் வர்த்தக அம்சங்கள் தொடர்பான பொது விரிவுரை ஒன்றையும் நடனக் குழுவின் ஸ்தாபகரும், பணிப்பாளருமான ஜொனதன் ஹொலன்டர் நடத்தினார். அதேவேளை, ஒலி,ஒளி அமைப்பு குறித்து குழுவின் முகாமையாளர் உரையாற்றினார்.

string(1) "1"
Top