Dec 14, 2016

காணமல் போயிருந்த ஐவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்

சிவனொளிபாத மலைக்கு அருகிலுள்ள காட்டுப்பகுதிக்குள் 5 பேர் காணாமல் போயிருந்தனர்


இவர்கள் யாவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் குறித்த ஐவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் காலை காட்டுப்பகுதிக்குள் சென்றிருந்த நிலையில் காணமல் போயிருந்தனர்.
இவர்களை தேடி பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் மற்றும் இராணுவத்தினரும் கடமையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று மாலை காணமல் போனவர்களில் ஒருவர் தொலைப்பேசி மூலம் இடத்தை சொல்ல
அந்த பகுதிக்கு சென்ற விசேட அதிரடிப்படையினர் காணமல் போனவர்களை மீட்டுள்ளனர்.

string(1) "1"
Top