Dec 15, 2016

5 வருட நன்கொடை உடன்படிக்கைக்கு இலங்கையை தெரிவு செய்துள்ள அமெரிக்கா

Millennium Challenge Corporation (MCC)இன் பணிப்பாளர்கள் சபையானது 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ஆம் திகதி நடைபெற்ற

தமது காலாண்டு கூட்டத்தின் போது, இலங்கை,புர்க்கினா பாசோ மற்றும் டுனிசியா ஆகிய நாடுகளை பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும்,

வறுமையை ஒழிப்பதற்குமான ஐந்து வருட நன்கொடையின் புதிய MCC உடன்படிக்கைகளுக்காக தெரிவு செய்துள்ளது.

MCCஇன் குறிப்பிடத்தக்க ஆதரவானது இலங்கை மக்களுடன் எமது ஆறு தசாப்த கால அபிவிருத்திக்கான பெரும் ஊக்கமாகும்” என என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷப் தெரிவித்தார்.


நாடொன்று MCC உதவி பெறுவதற்கு தகுதியடைவதற்கு, MCC வருடாந்த புள்ளிப்பட்டியலில் மூன்றாம் தரப்பு கொள்கை குறிகாட்டிகளால் அளவிடப்படலுக்கு அமைய நீதியான மற்றும் ஜனநாயக ஆட்சிமுறை,தமது மக்கள் மீதான முதலீடுகள்ää மற்றும் பொருளாதார சுதந்திரம் என்பவற்றிற்கான அர்ப்பணிப்பினை அது வெளிப்படுத்த வேண்டும்.

“நல்லாட்சிக்கான கடுமையான தரங்களை எட்டுவதற்கு அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுடன் இணைவதன் மூலம், ஊழலுக்கு எதிராக போராடுவது முதல் பெண்களின் உரிமைகளையும், சட்ட ஒழுங்கையும் மதிப்பது வரை, வறுமையை எதிர்த்து போராடுவதற்கும், மக்களின் வாழ்க்கையை நிலைமாற்றுவதற்கும் எமது ஆற்றலை நாம் அதிகரிக்கின்றோம்” என MCCஇன் பிரதம நிறைவேற்று அதிகாரி டானா ஜெ ஹைட் தெரிவித்தார்.


ஆரம்ப கட்ட நிகழ்ச்சிக்காக 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தெரிவு செய்யப்பட்ட இலங்கையானது, ஜனநாயக உரிமைகள் தொடர்பில் வெளிப்படுத்திய தேர்ச்சி உள்ளடங்கலாக தமது புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முன்னேற்றத்தை வெளிப்படுத்தியதன் விளைவாக தற்போது உடன்படிக்கை நிகழ்ச்சி நிலைக்கு செல்கின்றது. MCCஇற்கான புதிய உடன்படிக்கை பங்காளராக டுனிசியாவும் இணைகின்றது. அதேவேளை, 2014ஆம் ஆண்டு ஜூலையில் புர்க்கினா பாசோ தமது முதலாவது MCC உடன்படிக்கையை வெற்றிகரமாக நிறைவு செய்தது. அத்துடன், 2015ஆம் ஆண்டில் புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டது முதல் தமது புள்ளிப்பட்டியலில் தெளிவான கொள்கை முன்னேற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.


இலங்கை மற்றும் புர்க்கினோ பாசோ ஆகிய இரண்டு நாடுகளிலும்பி,ராந்திய தாக்கத்தினை மேம்படுத்துவதற்கு நியதிச்சட்ட அதிகாரங்களுக்கான தேவையை அங்கீகரிக்கும் அதேவேளை,

உள்ளக மற்றும் பிராந்திய ரீதியில் பொருளாதார வளர்ச்சிக்கான தடைகளை அடையாளப்படுத்தும் முதலீடுகளை MCC ஆராயும் என சபை பரிந்துரைத்தது.

 

MCC Sri Lanka 2017 Scorecard FINAL

string(1) "1"
Top