Dec 22, 2016

சிங்கள மக்களின் கடிதங்கள் குப்பையில் எறியப்பட்டன -நீதி அமைச்சர் Featured

மட்டக்களப்பு பிரதேசத்துக்கு பௌத்த மத விவகாரம் மற்றும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ விஜயம் மேற்கொண்டார்


அது தொடர்பாக கருத்து வெளியிட்டவர் ''சில பிரதேசங்களில் சிங்கள மக்கள் சிறுபான்மையாகவுள்ளனர். அங்கு
சிங்களவர்களுக்கு ஒரு பிரதிநிதிகூட இல்லை அத்தோடு அவர்கள் மொழிப் பிரச்சினைக்கு முகம்கொடுக்கின்றனர்
சிங்களத்தில் எழுதிக் கொண்டு செல்லும் கடிதங்கள் அரச அதிகாரிகளினால் குப்பையில் போடப்பட்ட சந்தர்ப்பங்களும் உள்ளன.
இடம்பெயர்ந்த சிங்களவர்கள் இன்னும் தமது சொந்த இடங்களில் குடியேற்றப்படாத ஒரு நிலைமையும் காணப்படுகின்றது
சிறுபான்மை என்பதை நாட்டின் முழு சனத்தொகையை அடிப்படையாக வைத்து யோசிக்காது
ஒவ்வொரு பிரதேசத்திலும் உள்ள மக்கள் தொகையை கருத்தில் கொண்டே நாம் யோசிக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்

string(1) "1"
Top