Jan 03, 2017

முன்னாள் இலங்கை அணி பயிற்றுவிப்பாளர் பாடசாலை அணிக்கு நியமனம் ? Featured

Mt. Lavinia பரி.தோமாவின் கல்லூரி கிரிக்கெட் குழுவினருக்கு பயிற்சியளிக்க 
இலங்கை அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் தினேஷ் குமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். 
 
தேசிய அணியின் பயிற்றுவிப்பாளர் ஒருவர் முதன் முதலாக பாடசாலை அணிக்கு பயிற்றுவிப்பளராக கடமையாற்றுவது 
இலங்கை வரலாற்றில் முதல் தடவை என்று கூறப்படுகிறது. 
 
1996ம் ஆண்டு இலங்கை அணி உலகக் கோப்பையை கைப்பற்றிய போது  தினேஷ் குமரசிங்க 
பயிற்றுவிப்பாளராக கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. 
அதன் பின்னர் பங்களாதேஷ் ,பாகிஸ்தான் மற்றும் சிம்பாவே ஆகிய நாடுகளிற்கு பயிற்சியாளராக கடமையாற்றியுள்ளார். 
 
பரி தோமாவின் கல்லூரிக்கும் கொழும்பு ரோயல் கல்லூரிக்கும் இடையில் நடைபெறவுள்ள big match
போட்டிக்காகவே இவர் நியமிக்கப்பட்டுள்ளார் .
string(1) "1"
Top