Jan 09, 2017

2020 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார் மைத்திரிபால சிறிசேன Featured

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  2020 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக 
அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.
 
2015ல் பதவி ஏற்கும் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,இரண்டாவது தடவையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று தெரிவித்திருந்தார் 
ஆனால் சமீபகாலமாக அந்த முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வந்தன.
 
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக போட்டியிட்டு சிறுபான்மையினரின் 27 சதவீத ஓட்டுக்களை 
ஜனாதிபதியால் மைத்திரிபால சிறிசேன அவர்களினால் மட்டுமே பெற முடியும் என்றும் 
அதனால் அவரை வேட்பாளராக நியமிக்க தீர்மானித்துள்ளதாகவும்
தெரிவித்தார் .
string(1) "1"
Top