Jan 09, 2017

சிரச தொலைக்காட்சியில் கோத்தபாயவின் அரசியல் பிரச்சார நிகழ்ச்சி! Featured

சிரச தொலைக்காட்சி மூலம் தனது அரசியல் அறிக்கைகள் தொடர்பான ஒரு பிரச்சார  நிகழ்ச்சியை 
நடத்த கோத்தபாய ராஜபக்ச திட்டமிட்டு வருகிறார் .
முக்கியமாக கிராமங்களில் இந்த நிகழ்சியை நடத்தவும்  கோத்தபாய அந்த மக்களின் தலைவர் என்ற எண்ணத்தை 
உருவாக்கும் விதமாக நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது .
முக்கியமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் திட்டங்களுக்கு எதிரான பல பிரச்சாரங்கள் 
இந்த நிகழ்ச்சியில் உள்ளடக்கப்பட்டதாக கூறப்படுகிறது . 
‘Viyath Maga’ என்று பெயரிடப்பட்ட திட்டத்தின் மூலம் 
2020ல் பிரதமர் அல்லது ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய களமிறங்கவுள்ளார் என்று கூறப்படுகிறது 

 

string(1) "1"
Top