Jan 09, 2017

100,000 பேரிற்கு நன்மையளிக்க கூடிய USAID சுத்தமான நீர் திட்டம் Featured

பேரழிவால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட சமுதாயங்களில் 100,000 பேரிற்கு நன்மையளிக்க கூடிய USAID சுத்தமான நீர் திட்டம்

கொழும்பு ஜனவரி 9-2017- இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணாண்டோபுள்ளை மற்றும் MEPயின் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஸ் குணவர்த்தன ஆகியோருடன் இணைந்து இலங்கையின் உள்ளுர் சமூகத்திற்கு சுத்தமான பேரழிவை எதிர்கொள்ளக்கூடிய குடிநீரை வழங்கும் 150 மில்லியன் டொலர் பெறுமதியான திட்டத்தை அமெரிக்க அரசாங்கம் கடந்த வாரம் ஆரம்பித்து வைத்துள்ளது. 2012 முதல் வரட்சி,மற்றும் வெள்ளத்தினால் அடிக்கடி பாதிக்கப்படும் வடக்கு கிழக்கு மற்றும் தென்பகுதிக்கு குடிநீரை வழங்கும் வகையில் USAID அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களின் ஓரு விஸ்தரிப்பாகவே இந்த திட்டம் அமைந்துள்ளது.


“நாளாந்தம் போராட்டத்தை எதிர்கொண்டுள்ள இலங்கையின் குடும்பங்களிற்கு நம்பகதன்மை வாய்ந்த சுத்தமான குடிநீரை வழங்குவது குறித்து அமெரிக்கா அர்ப்பணிப்புடன் உள்ளது” என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேஷப் தெரிவித்தார்.

இந்த திட்டத்தின் கீழ்; மழைநீரை சேகரிப்பதற்கான தொட்டிகளை அமைத்தல், குழாய் மூலம் குடிநீரை பெறுவதற்கான வசதிகளை வழங்குதல்வெள்ளம் மற்றும் வரட்சியினால் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்வதற்காக உள்ளுர் உட்கட்டமைப்புகளை சீர்திருத்தம் செய்தல் போன்ற திட்டங்களும் அடங்கியுள்ளன. இலங்கையின் முக்கிய சுகாதாரப் பிரச்சினைகளை அடையாளப்படுத்தும் ஜனாதிபதி சிறிசேன மற்றும் இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில நாட்டில் அதிகரித்து வரும் கடும் சவாலாக காணப்படும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் மற்றும் மருத்துவமனைகளிற்கு மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை அமைப்பதற்கான இடங்களை தெரிவுசெய்வதற்கு இந்த திட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கப்படும்.


இதற்கு மேலதிக இந்த திட்டம் இவ்வாறான இடர்களை குறைப்பதற்கான தேசிய மற்றும் பிராந்திய கொள்கைகளிற்கு ஆதரவு வழங்கும்அதேவேளை பேரழிவுடன் தொடர்புபட்ட நீர் மற்றும் சுகாதார தேவைகளிற்கு நிரந்தரமான தீர்வை காண்பதற்கு உள்ளுர் சமூகங்களிற்கு இந்த திட்டம் உதவும்.

“USAID இலங்கையில் மழைநீர் சேகரிப்பை ஊக்குவிப்பது மற்றும் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதல் உள்ளடங்கலாக இலங்கைக்கு USAID வழங்கிவரும் மிகச்சிறந்த ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதற்காக இந்த தருணத்தை பயன்படுத்த விரும்புகின்றேன்” என நகர திட்டமிடல் மற்றும் நீர்விநியோக இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்தார்.

USAID இலங்கையில் பாதுகாப்பான நீரிற்கான இலகுவான செலவற்ற முறைகளை ஏற்படுத்துவதில் 20 வருடத்திற்கும் மேற்பட்ட அனுபவத்தை கொண்ட உள்ளுர் அமைப்பான லங்கா ரெயின்வோட்டர் ஹர்வஸ்டிங் போரத்துடன் மீண்டும் கைகோர்க்கின்றது. வடக்கிற்கு மேலதிகமாக இந்த திட்டம் தொடர்ச்சியாக இயற்கை அனர்த்தங்களை சந்தித்துவரும் ஊவா மாகாணத்தையும் இலக்காக கொண்டு செயற்படும். இன்னொரு உள்ளுர் அமைப்பான பாம் பவுண்டேசன் கிழக்கில் சமூகங்களிற்கு குழாய் நீர், மழைநீர் சேகரிப்பு தொட்டிகள்மற்றும் உள்ளுர் பயிற்சிகளை வழங்கும்.


1956 ஆண்டு முதல் USAID இலங்கை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக இலங்கையுடன் இணைந்து பணியாற்றி வருவதுடன், விவசாயம், வர்த்தக அபிவிருத்தி, சுகாதாரம், எரிசக்தி, இயற்கைவளங்கள். நல்லாட்சி, மற்றும் மனிதாபிமான உதவி போன்ற துறைகளில் 2 பில்லியன் டொலர்களிற்கு மேல் முதலீடு செய்துள்ளது.

string(1) "1"
Top