Jan 11, 2017

சிவில் சமுகத்தினரின் அதிருப்தி Featured

2015ல் பதவி ஏற்கும் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,இரண்டாவது தடவையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று தெரிவித்திருந்தார்


அத்தோடு நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி என்ற விடயத்தை ஒழிப்பேன் என்பதையும் வாக்குறுதியாக கொடுத்திருந்தார்.
ஆனால் தற்போது வாக்குறுதியை மீறி 2வது தடவையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடபோவது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

இந்த அதிருப்தியே ஜனாதிபதியின் எதிர்கால அரசியல் நிலையை கேள்விகுறியாக்கியுள்ளது.


ஊடக மாநாட்டில் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க, கட்சியின் தலைவர் மைத்திரிதான் அடுத்த வேட்பாளர் என்று கூறினார்
ஆனால் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பேசுகையில்
மைத்திரி ஜனாதிபதி வேட்பாளர் இல்லை ...அப்படி ஒரு முடிவினை ஸ்ரீலங்கா சுகந்திரக்கட்சி இன்னும் எடுக்கவில்லை
என்று தெரிவித்தார்

பல சர்சைகள் நடந்துவருகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதுதொடர்பாக இன்னும் எந்த
அறிக்கையும் வெளியிடவில்லை என்பது குறிப்படத்தக்கது.

string(1) "1"
Top