Nov 01, 2016

முதன் முதலில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் T.ராஜேந்தர்

திரையுலகில் 20 வருடங்களுக்கு மேலாக தனி ஆவர்த்தனம் புரிபவர் விஜய T.ராஜேந்தர் . இயக்குனர் நடிகர் இசையமைப்பாளர் என்று தசாவதானியாக 
திகழும் T.ராஜேந்தர் தனது படங்களில் மட்டுமே இதுவரை நடித்துள்ளார் .



பிற இயக்குனர்களின் படங்களில் இசையமைத்தும் பாடியும் வந்தாலும் 
நடிகராக களமிறங்கியதில்லை;பல இயக்குனர்கள் நடிக்க கேட்டும் மறுத்துவிட்டார் .

வெளி இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆர்வமில்லை என்றும் கூறியிருந்தார். ஆனால் தற்போது இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி,மடோனா செபாஸ்டியன் நடிக்கும் கவண் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது .
அயன்,கோ போன்ற வெற்றிப்படங்களை தந்த இயக்குனர் கே.வி.ஆனந்த், நீண்ட நாட்களாக நடிக்காதிருந்த கார்த்திக்கை தனது அனேகன் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்க வைத்தவர் இந்த முறை டி.ராஜேந்தரை நடிக்க வைத்து ஆச்சரியப்படுத்தியுள்ளார் .

நீங்கள் இதுவரை வெளி இயக்குனர்களின் படங்களில் நடித்ததில்லை. 
முதன் முதலாக நடிகின்றீர்கள் எப்படி உணர்கின்றீர்கள் என்று கேட்டபோது 
‘’முதன் முதலில் இன்னொரு இயக்குனரிடம் பணியாற்றுகையில் கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது. ஆனால் கே.வி.ஆனந்தின் டைரக்ஷன் ஸ்டைல் எனக்குபிடித்து விட்டது . இனி அடிக்கடி தொடர்ந்து மற்ற இயக்குநர்களின் இயக்கத்தில் நடிப்பேன்’’ என்று கூறினார் .
இதனால் கவண் படத்தில் T.ராஜேந்தரின் கதாபாத்திரம் எப்படியிருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு திரையுலகில் ஏற்பட்டுள்ளது .

string(1) "1"
Top