Nov 01, 2016

காஷ்மோராவால் கார்த்திக்கு வந்த சோதனை

கார்த்தியின் காஷ்மோரா திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.



நடிகர் கார்த்திக்கு தமிழ்நாட்டைப் போலவே ஆந்திராவிலும் நல்ல மார்க்கெட் உள்ளதால் இருமொழிகளிலும் வெளியாகிறது காஷ்மோரா. 
தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும் இந்தப்படத்தின் விளம்பரப் பணிகளுக்காக ஆந்திராவுக்கும் தமிழ் நாட்டுக்கும் மாறி மாறி பயணித்து வருகிறார் .
தெலுங்கு பதிப்பின் விளம்பர பணிகளுக்காக கலந்துகொண்டு மேடையில் பேசிகொண்டிருந்த போது அவருக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைத்தது .
மேடையில் மிகத் தீவிரமாக படத்தை பற்றி பேசிகொண்டிருந்த போது திடிரென்று கார்த்தி ஒட்டியியிருந்த ஒட்டுமீசை லேசாக கழன்று விழ ஆரம்பித்தது .
மேடையில் இருந்த உதவியாளர் அதைக்கவனித்து அவருக்கு சொல்ல சட்டென்று அதை ஒட்டவைக்க மேடையில் இருந்து அகன்றுவிட்டார்.
அதன் பிறகு அங்கிருந்து கிளம்பிவிட்டார் கார்த்தி .

string(1) "1"
Top