Nov 01, 2016

அமிதாப்பின் அபிமானத்தைப்பெற்ற இயக்குனர் ராஜமௌலி

அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் பலரின் கவனத்தையும் தற்போது பெற்றுள்ளது .



ராம் கோபால் வர்மாவின் இயக்கத்தில் சர்கார் படத்தின் 3ம் பாகத்தில் நடித்து வருகிறார் அமிதாப் பச்சன் .
படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்தவர், படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் ராஜமௌலியை சந்தித்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் .


ராம்கோபால்வர்மாவுக்கும் ராஜமௌலிக்கும் நல்ல நட்பு உண்டு. 
ஈகா படத்தை பார்த்து ராம்கோபால்வர்மா ராஜமௌலியை பாராட்டி பேசிய பின்னர் இருவருக்குள்ளும் நல்ல நட்பு உருவானது .
பாகுபலி திரைப்படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்தியா முழுவதும் பிரபலமானார் இயக்குனர் S.S.ராஜமௌலி.


சர்கார் படப்பிடிப்பு தளத்துக்கு ராஜமௌலி வரவே அவரை சந்தித்த அமிதாப், 
‘மிகவும் எளிமையான நல்ல மனிதர் ராஜமௌலி’ என்ற பாராட்டோடு அந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
அமிதாப் –ராஜமௌலி இருவரும் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றகூடும் என்ற எதிர்பார்ப்பு தற்போது திரையுலகில் ஏற்பட்டள்ளது .

string(1) "1"
Top