Nov 01, 2016

உலகம் முழுவதும் பரவும் தென்கொரிய ZOMBIE Featured

Zombie வகை திரைப்படங்கள் சினிமாவுக்கு புதிதல்ல. உலகம் முழுவதும் பல திரைப்படங்கள் இருந்தாலும் 

இந்த ஆண்டு வெளியான Train to Busan திரைப்படம் அதிக புகழ் அடைந்துள்ளது.


தென்கொரியாவின் அனிமேஷன் பட இயக்குனர் Yeon Sang-ho. 

The King of Pigs மற்றும்  The Fake ஆகிய அனிமேஷன் திரைப்படங்களை இயக்கிவர்.

Train to Busan திரைப்படத்தை முதன் முதலாக  முழுநீளப்படமாக எழுதி இயக்கியுள்ளார்.

படத்தின் கதை :

Gong Yoo விவாகரத்து பெற்றவர் .பெற்றோரின் விவகாரத்தினால் தனிமையில் வாடுகிறாள் மகள் Kim Su-an. 

மகளின் பிறந்தநாளுக்கு, ரயிலில் மகளை அழைத்துக்கொண்டு மனைவியை பார்க்க செல்கிறார்.

திடிரென்று அடிபட்ட நிலையில் ஒரு பெண் அந்த ரயிலில் ஏறுகிறாள்.

அவன் இறந்து zombieஆகி இன்னொரு பெண்ணை கடிக்க, ரயிலில் ஒவ்வொருவராக zombie ஆக மாறத்தொடங்குகின்றனர்.

ஊரில் உள்ள அனைவரும் zombieஆக மாறிய நிலையில் ரயிலை எங்குமே நிறுத்த முடியாத நிலையில் எப்படி ரயிலில் உள்ளவர்களால் busan நகருக்கு உயிருடன் திரும்ப முடிந்தது என்பதை 

விறுவிறுப்பும் சென்டிமென்ட்டும் கலந்து தந்திருக்கிறார் இயக்குனர் Yeon Sang-ho.

மே மாதம் இடம்பெற்ற கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இத்திரைப்படம் பாராட்டுக்களைப் பெற்றது.

ஜூலை 20ம்திகதி தென்கொரியாவிலும் 22ம் திகதி அமெரிக்காவிலும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

US$99 million வசூலை வெளியான 2 மாதத்தில் பெற்றதாக சொல்லப்படுகிறது.

அத்தோடு இணையத்தில் அதிகம் பார்வையிடப்பட்ட தென்கொரிய திரைப்படங்கள் வரிசையில் முன்னணி வகிக்கிறது .

நேரடியாக தமிழ்நாட்டில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட முதல் தென்கொரிய திரைப்படம் இதுதான்.

இதன் வரவேற்பு காரணமாக இன்னும் பல மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளனர் .

இதனுடைய prequel ஆக அனிமேஷனில் வெளியாகியுள்ளது Seoul Station.

அத்திரைப்படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதால் விரைவில்

Seoul Stationம் Train to Busan போல உலகமெங்கும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

string(1) "1"
Top