Nov 01, 2016

மாதுரி தீக்ஷித்தை புகழும் பிரபுதேவா Featured

20 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் நடன இயக்குனராக நடிகராக வலம் வருபவர் பிரபுதேவா .


சமிபத்தில் இவர் நடிப்பில் தேவி திரைப்படம் தமிழ் ,தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியானது .

இனி தொடர்ந்து நடிக்கவுள்ளதாகவும் நிறைய நல்ல கதைகளை எதிர்பார்ப்பதாகவும் வெளிப்படையாக பேட்டி கொடுத்தார் .

தேவி திரைப்படத்தில் தம்மன்னாவின் நடனம் பிரபலமானதை பற்றி கேட்டபோது தம்மன்னா தனது நடன இயக்கத்தில் பணியாற்ற விரும்பி கேட்டுகொண்டதால் தான், அந்த பாடலை செய்துகொடுத்தேன் .

அந்த பாடல் சிறப்பாக வர வேண்டுமானால் 20நாட்கள் ரிகர்சல் செய்ய வேண்டும் என்று சொல்ல அதன்படி தம்மன்னா செய்தார் என்று கூறிய பிரபுதேவாவிடம்,

‘சினிமாவில் எந்த நடிகை டான்ஸ்விஷயத்தில் சிறப்பானவர்’ என்று கேட்க

‘’மாதுரி தீக்ஷித் மிகச்சிறந்தவர்.நான் பலருக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளேன் .நடனம் என்பது நடிப்பல்ல ...

இயல்பில் வரவேண்டும்.நம் உடல் நம்மையறியாமல் ஆட்டத்தை தொடர வேண்டும் .

என்னதான் நடனம் ஆடத்தெரிந்தாலும் perfection என்பது அனைவருக்கும் வருவதில்லை ....

அந்த perfection வர வேண்டும் என்பதற்காக தமன்னாவுக்கு 20 நாட்களுக்குமேல் ரிகர்சல் கொடுத்தேன் .அவரும் சிறப்பாக ஆடினார் .ஆனால்

இதுவரை நான் பார்த்த நடிகைகளில் மாதுரி தான் நடனத்தில் கை தேர்ந்தவர் .மிகசிறப்பான நடனத்தை ஒவ்வொருமுறையும் வெளிப்படுத்துகிறார் ‘’என்று பாராட்டினார் .

string(1) "1"
Top