Nov 01, 2016

சௌந்தர்யாவின் இயக்கத்தில் தனுஷ்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இளையமகள் சௌந்தர்யா.


''நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்'' என்று பெயரிட்டுள்ள திரைப்படத்தை இயக்கவுள்ளார் .
இந்த படத்தில் புதுமுகங்கள் நடிப்பார்கள் என்று ஆரம்பத்தில் கூறியிருந்தார் .
அதன் பின்னர் மோகன் லாலின் மகன் பிரணவ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது .
ஆனால் தற்பொழுது தனுஷ்தான் இந்தப்படத்தின் நாயகன் என்று சொல்லப்படுகிறது .
தனுஷ் தற்பொழுது பவர் பாண்டி படத்தை இயக்கிவருகிறார் 
நவம்பர் மாதம் படப்பிடிப்புக்கள் முடிவடையும் நிலையில் அதே நவம்பரில் சௌந்தர்யாவின் திரைப்பட வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன .
இந்த படத்தின் நாயகியாக நடிக்க பாலிவுட் கதாநாயகிகள் பலரிடம்
பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது .
நாயகி ஒப்பந்தமான பின்னர் நவம்பர் முதல் வாரத்தில் படத்தை பற்றிய முழுமையான தகவல்களை வெளியிடுவோம் என்று சௌந்தர்யா தரப்பில் கூறியுள்ளனர் .

string(1) "1"
Top