Nov 15, 2016

ஜாக்கிசானுக்கு ஆஸ்கார் விருது Featured

உலக புகழ் பெற்ற நடிகரான ஜாக்கிசானுக்கு, கௌரவ ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது.

லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற இந்த விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது ஜாக்கி சானுக்கு வழங்கப்பட்டது .

இந்த விருதினை பெற்றுக்கொண்ட ஜாக்கி சான்

''பல வருடங்களுக்கு முன்னர் நானும் என் தந்தையும் ஆஸ்கார் விழாவை தொலைக்காட்சியில் பார்த்துகொண்டிருக்கையில்

நீயும் இது போல விருது வாங்குவாயா ? என்று கேட்டார் .நான் அதை சிரிப்பால் கடந்து விட்டேன் .
அதன் பின்னர் பல படங்களில் நடித்து ஹாலிவுட் சினிமாவில் நுழைந்த பின்னும் எனக்கு விருது என்பது கனவாகவே இருந்தது .
என் நண்பரின் வீட்டில் இருந்த ஆஸ்கார் விருதினை தொட்டு ரசித்தேன் .
அந்த விருதில் என் கைரேகை இன்றும் கூட இருக்கும் .
சிரமப்பட்டு நான் நடித்தவை எல்லாம் ஆக்ஷன் படங்கள் .அவற்றுக்கு ஆஸ்கார் என்பது வெகு தூரமே .
ஆனால் இன்று
56 வருடங்கள், 200 திரைப்படங்கள், பல எலும்புகளை முறித்துக் கொண்ட பிறகு, கடைசியாக இந்த விருது எனக்கு வழங்கப்பட்டுள்ளது.''

என்று புன்னகையுடன் விருதைப் பெற்றுக் கொண்டார் .
அவர் மேலும்,'இந்த விருதினை அளித்த ஆஸ்கார் கமிட்டி ,ஹாலிவுட் திரையுலகத்துக்கு என் நன்றிகள் .
 என் தாயகம் ஹாங்காக்,என்னை வளர்த்தெடுத்த சீனா இரண்டு நாட்டுக்கும் என் நன்றிகள்

நான் சீனனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.

எல்லாவற்றுக்கும் மேலாக என்னை தொடர்ச்சியாக படங்கள் எடுக்க உற்சாகப்படுத்தும் என் ரசிகர்களுக்கு மிக்க நன்றி.'என்று கூறினார் .
அத்தோடு தனது உத்தியோக பூர்வ இணையதளப்பக்கத்தில் நன்றியை தெரிவித்துள்ளார் .

oscars diary 225x300

string(1) "1"
Top