Nov 25, 2016

நயன்தாராவுக்காகவே தயாராகும் திரைப்படங்கள்

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஹீரோயின் என்றால் அது நயன்தாரா தான் .
பிரபல ஹீர்ரோக்களின் படங்களில் நடித்துவந்தவர் அனாமிகா ,மாயா திரைப்படங்களின்  பின்னர்
தன் நடிப்புக்கு வாய்ப்புள்ள படங்களை தெரிவு செய்ய ஆரம்பித்தார் .
தற்போது நயன்தாரா முக்கியவேடத்தில் நடிக்கும் மூன்று படங்கள் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது .

கொலையுதிர் காலம்

'உன்னைப்போல் ஒருவன்', 'பில்லா 2' போன்ற படங்களை இயக்கிய சக்ரி டோல்டி இயக்கும்  படம் 'கொலையுதிர் காலம்'.
இந்தப் படத்தை ஒய்.எஸ்.ஆர் ஃபிலிம்ஸ் மூலம் தயாரித்து இசையமைக்கிறார்.
யுவன் ஷங்கர் ராஜா. தமிழ், தெலுங்கில்  தயாராகிறது

N1 670px 25 11 16


அறம்

கோபி நயினார் இயக்கும் படம் 'அறம்'.
இதில் நயன்தாராவுக்கு கலெக்டர் வேடம்.
ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு, பீட்டர் ஹெய்ன் சண்டைப்பயிற்சி, லால்குடி இளையராஜா கலை இயக்கம்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான 'கத்தி' படத்தின் கதை தன்னுடையது என புகார் தெரிவித்தவர்
இந்த மீஞ்சூர் கோபிதான் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

n2 670px 25 11 16


டோரா
இயக்குநர் சற்குணம் மற்றும் ஹிதேஷ் ஜபக் தயாரிப்பில்,
 சற்குணத்தின் உதவி இயக்குநர் தாஸ் ராமசாமி இயக்கும் படம் 'டோரா'.
வித்தியாசமான த்ரில்லர் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைக்கிறார்கள்.

n3 670px 25 11 16

string(1) "1"
Top