Nov 29, 2016

சைத்தான் நிச்சயம் வெற்றிபெறுவான்

சைத்தான் திரைப்படம் ஓரளவு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வேளையில், படம் பற்றி இயக்குனர் பிரதீப்பிடம் கேட்க
படத்தை பற்றி கூறினார்


''விஜய் ஆண்டனி தான் இந்தப் படத்துல சைத்தான், ஆனா பாஸிட்டிவ் ரோல் தான்.  
ஐடி கம்பெனியில் வேலை செய்யும்  விஜய் ஆண்டனிக்கு வரும் பிரச்னை என்ன, அதனால் ஏற்படும் விளைவுகள் தான் சைத்தான் படத்தோட கதை .
படத்துல திரைக்கதை தான் ரொம்ப வலிமையா இருக்கும். இடைவேளை வரை ஒரு அமைப்பிலும் , இடைவேளிக்குப் பிறகு இன்னொரு அமைப்பிலும் படம் நகரும்.
அதான் இந்தப் படத்தோட ஸ்பெஷல்.  
ப்ளாக் மேக்ஜிக்கோ, சைக்கோவோ, சீரியல் கில்லர் படம் மாதிரியோ கிடையாது.
ஆனால் திரைக்கதை சைக்கலாஜிக்கள் ஆக்‌ஷன் ட்ராமாவா இருக்கும்.
கமர்ஷியல் படம் தான், இருந்தாலும் கொஞ்சம் வெரைட்டியா இருக்கும்.''

எழுத்தாளர் சுஜாதாவின் ஆ நாவலின் பாதிப்பில் இந்தப்படத்தின் கதை அமைந்துள்ளதாக கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

string(1) "1"
Top