Nov 15, 2016

ரயில் விபத்தை தடுத்த கிராமவாசி

நேற்று நடைபெறவிருந்த ரயில் விபத்தொன்றை மிகவும் சிரமப்பட்டு தடுத்துள்ளார் கிராமவாசி ஒருவர் .

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் யாழ்தேவி ரயிலானது தனது பயணத்தை தொடரும்

ரயில் பாதையில் பெரும் உடைப்பு இருந்ததை கண்டுள்ளார் விஜித குமாரதாச என்ற கிராம வாசி .

இவர் கடைக்கு செல்ல முனைந்த பொழுதே எதேச்சையாக இதை கவனித்துள்ளார் .

உடனே 1919க்கு அழைப்பெடுத்து தம்புட்டேகம மற்றும் செனரத்கம ரயில் நிலையங்களுக்கு இதனை அறிவித்தவர்

ரயிலானது புறப்பட்டு விட்டது என்பதை அறிந்து

சுமார் 1 மைல் தூரம் ஓடி, தான் அணிந்திருந்த சிவப்பு சட்டையைக் காட்டி

ரயிலை நிறுத்தி அந்த விபத்தினை தடுத்து மக்களை காப்பற்றியுள்ளார் .

string(1) "1"
Top