Nov 18, 2016

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஊடக சந்திப்பு

மலர் மொட்டு சின்னத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்புரிமையை

முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் அவருடன் மேலும் சிலரும் பெற்றுள்ளார்.


.இந்த கட்சிக்கு முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை  கட்சியினை பஷில் வழி நடத்தவுள்ளார். கட்சியின் முதல் செய்தியாளர் சந்திப்பு நேற்று இடம்பெற்றது .

கட்சியை வளப்படுத்தும் நோக்கில் கட்சியின்  தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு

சீனாவுக்கு செல்லவுள்ளது என்பதையும் குறிப்பிட்டனர் .

அத்தோடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனப்பூர்வமாக இந்தக் கட்சியுடன் இணைய உள்ளதாகவும் 

அதற்கு அவர்களுக்கு சட்ட ரீதியான பாதிப்பு உள்ளதாகவும் தெரிவித்தார் .

string(1) "1"
Top