Nov 21, 2016

Fashion Bug தீவிபத்தால் 200 மில்லியன் நஷ்டம்

பெபிலியானவில் உள்ள ஃபேஷன் பக் ஆடைக்காட்சியறையில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக 2௦௦ மில்லியன்கள் நஷ்டமடைந்துள்ளதாக  
தெரிவிக்கப்படுகிறது .

ஆடைகள் மட்டுமல்லாது களஞ்சியசாலை முதன்மை அலுவலகம் உட்பட சகல இடங்களும் தீயால் எரிந்துள்ளதகவும்
கருவிகளும் தேசமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது .

சம்பவ இடத்திற்கு நகர சபையின் தீயணைப்பு வண்டிகள் தாமதமாக வந்ததை பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்
மேலும் இதுபற்றிய விசாரணைகளை போலீசார் நடத்தி வருகின்றனர் .

இதேவேளை தீ விபத்து இடம்பெற்ற வேளையில் அங்கிருந்த CCTV, கமரா பதிவுகளை போலிசார் பலவந்தமாகக் கொண்டு சென்றதாக ஃபேஷன் பக் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன்போது நிறுவன ஊழியர் ஒருவர் பொலிசாரினால் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

string(1) "1"
Top