Dec 03, 2016

முடிவுக்கு வந்தது பஸ் பணிப்பகிஷ்கரிப்பு Featured

அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள 7 போக்குவரத்து குற்றச்சாட்டுக்களுக்கு 25,000 ரூபாய் அபராதம் விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து,

தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்தன.
இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்குள்ளானது.

இதன் இறுதிக்கட்டமாக, ஜனாதிபதி மற்றும் அகில இலங்கை தனியார் பஸ்கள் சங்கங்கங்களின் சம்மேளனத்திற்கும் இடையிலான
விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
வாகன சாரதிகளுக்கான குறைந்தப்பட்ச தண்டப்பணமான 25 ஆயிரம் ரூபா நடைமுறைப்படுத்தப்படாது என
ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ்கள் சங்கங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

string(1) "1"
Top