Nov 01, 2016

ஏமனில் 60 பேர் பலி

அமெரிக்காவின் ஆதரவுடன் ஆட்சி நடத்தி வந்த அதிபர் மன்சூர் ஹாதியை, ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள், 2014ல் ஆட்சியில் இருந்து விரட்டினர்.


தலைநகர் சனாவை, 2014ல் கைப்பற்றினர்.

அதிபர் மன்சூர் ஹாதி சவுதி அரேபியாவில் தஞ்சமடைந்தார்.

இதையடுத்து, ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக, சவுதி தலைமையில்,

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், ஜோர்டான், எகிப்து உள்ளிட்ட ஒன்பது நாடுகள் களமிறங்கின.

இந்த தாக்குதலில், ஏமனில், அப்பாவி பொதுமக்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகின்றனர்.

இதுவரை, 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்; 30 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.


இந்நிலையில், அதிபர் ஆதரவு படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான,

72 மணி நேர சண்டை நிறுத்தம், சமீபத்தில் முடிந்தது. இதையடுத்து, ஹூதாய்தா என்ற இடத்தில்,

சிறை வளாகத்தின் மீது, சவுதி கூட்டுப்படையினர், அடுத்தடுத்து, விமானங்கள் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.

இதில், 60 கைதிகள் உயிரிழந்தனர்; பலர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

string(1) "1"
Top