Nov 01, 2016

ஆசிய ஹாக்கியில் மீண்டும் சாம்பியனானது இந்தியா Featured

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டி மலேசியாவின் குவான்டன் நகரில் இடம்பெற்றது .  ஞாயிற்றுக் கிழமை இறுதிப் போட்டி இடம்பெற்றது .



இறுதிச்சுற்றில் இந்தியா 3-2 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்தப் போட்டியில் இந்திய அணி 2-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதற்கு முன்னர் 2011-இல் நடைபெற்ற முதல் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி போட்டியில்

இந்தியா சாம்பியன் ஆகியுள்ளது. அப்போதும் இறுதிச்சுற்றுஇந்தியா பாகிஸ்தானுகிடையில் தான் இடம்பெற்றது. 
இறுதி ஆட்டத்தில் இந்திய அணியில் கேப்டனும், கோல் கீப்பருமான ஸ்ரீஜேஷ் காயம் காரணமாக விளையாடவில்லை.

அவருக்குப் பதிலாக ஆகாஷ் சிக்டே களமிறங்கினார்.
ஆரம்பம் முதலே இரு அணிகளும் அபாரமாக விளையாட, ஆட்டம் விறுவிறுப்பாக நகர்ந்தது.
இந்தத் தொடரில் ரூபிந்தர் பால் சிங் 11 கோல்களை அடித்தார்.

இதன்மூலம் இந்தத் தொடரில் அதிக கோலடித்தவர் என்ற பெருமையை அவர் தட்டிச் சென்றார்.

string(1) "1"
Top