Nov 28, 2016

வெற்றிபெற்றது இலங்கை அணி

இலங்கை, சிம்பாப்பே, மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் பங்கேற்ற
ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் சம்பியனாக இலங்கை அணி தெரிவாகியுள்ளது.

புலவாயோவில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில்,
சிம்பாப்வே அணியை ஆறு விக்கெட்டுகளினால் வென்று இலங்கையணி சாம்பியனாகியுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி, 36.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 160 ஓட்டங்களை பெற்றது.
161 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய இலங்கையணி, நான்கு விக்கெட்டுகளையிழந்த நிலையில் வெற்றியிலக்கை அடைந்தது.
குசல் மென்டிஸ் தொடரின் நாயகனாக தெரிவானார்.

string(1) "1"
Top