Dec 03, 2016

IIAF விருதுகள் Featured

தடகள விளையாட்டுக் கூட்டமைப்புக்களின் பன்னாட்டுச் சங்கம் IIAF (International Association of Athletics Federations)
சிறந்த தடகள வீரர் மற்றும் வீராங்கனையை தேர்ந்தெடுத்து விருதுகளை வழங்கியது.


சிறந்த தடகள வீரராக உசேன் போல்ட்க்கு விருது வழங்கப்பட்டது.
ஒன்பது முறை ஒலிம்பிக் சாம்பியனான போல்ட், இதுவரை 5 முறை உலகின் தலைசிறந்த தடகள வீரர் விருதை பெற்றுள்ளார்.
இந்த ஆண்டும் விருது பெற்று ஆறாவது முறையாக தலைசிறந்த தடகள வீரர் என்னும் பட்டத்தை தன் வசமாக்கினார் .
தலைசிறந்த தடகள வீராங்கனையாக எத்தியோப்பியா நாட்டின் அல்மாஸ் அயனா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 29 நிமிடம் 17.45 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து
புதிய உலக சாதனை படைத்து தங்கப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

string(1) "1"
Top