Nov 01, 2016

இயேசுவின் கல்லறை திறப்பு

ஜெருசலேம்  நகரில், இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையுடன் தொடர்புடைய பல இடங்கள் அமைந்துள்ளன.


இயேசு சிலுவையில் அறையப்பட்டு ,உயிர்த்தெழுவதற்கு முன் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை, ஜெருசலேமில் உள்ளது .
இந்தக் கல்லறையானது புனித ஸ்தலம் போன்றே கருதப்படுகிறது .

தற்போது பல  நுாற்றாண்டுகளுக்கு பின் திறக்கப்பட்டுள்ளது.

இந்தக்  கல்லறையில், இயேசு கிறிஸ்துவின் உடல் கிடத்தி வைக்கப்பட்டதாக நம்பப்படும், கற்பலகை காணப்படுகிறது .

இரு நுாற்றாண்டுகளுக்கு முன், ஏற்பட்ட தீ விபத்தின்போது, கல்லறையின் சில பகுதிகள் சேதமடைந்தன  .

அதனால் பாதுகாப்புக்காக மார்பிளால் மூடி மறைக்கப்பட்டது.இதனால் யாருக்கும் கல்லறையின் உட்பகுதி வரை செல்லமுடியா நிலை ஏற்பட்டது .
இந்நிலையில், நுாற்றாண்டுகளுக்கு பின், அந்த கல்லறையை சீரமைக்கும் பணி, தற்போது நடந்து வருகிறது.

இதைத் தொடர்ந்து, இயேசுவின் உடல் கிடத்தப்பட்ட கல் மீது இருந்த, மார்பிள் அகற்றப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது.
அரசியல் ரீதியாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகள்,  ஜெருசலேம் நகருக்கு உரிமை கொண்டாடி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது .

string(1) "1"
Top