Nov 11, 2016

மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு செல்லும் ஷார்பத் குலா Featured

உலகத்தின் பிரபலமான புகைப்படங்கள் வரிசையில் முக்கியமான ஒரு புகைப்படம்
ஷார்பத் குலா(Sharbat Gula) வின் புகைப்படம்


12 ஆண்டுகளுக்கு முன்னர் பச்சை கண்களையுடைய பெண் என்று 'National Geographic' பத்திரிக்கை தனது அட்டைப்படத்தில் இவரை பிரசுரிக்க உலகப்பிரபலமானர் .

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இவர் பாகிஸ்தானில் வசித்து வந்தார்
போலியான ஆவணங்களை பயன்படுத்தியே வாழ்ந்துவந்துள்ளார் என்ற குற்றசாட்டு சுமத்தப்படவே கடந்த மாதம் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இவரை நாடுகடத்தவும் அரசாங்கம்  உத்தரவிட்டது .ஆனால் மனிதாபிமான அடிப்படையில் நாடு கடத்தும் முடிவை கைவிட்டு பாகிஸ்தானில் வசிக்க அனுமதி கொடுத்தது .
இந்த பிரச்சனையால் மன உளைச்சலுக்கு ஆளான ஷார்பத் குலா, தான் தாய்நாடான ஆப்கானிஸ்தானிற்கே செல்ல விரும்புவதாக கூறியுள்ளார் .இனி பாகிஸ்தானில் வசிக்க தனக்கு விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளார்
இதனால் ஷார்பத் குலானை ஆப்கானிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதி அதிகாரிகளிடம் ஒப்படைத்தது  பாகிஸ்தான் அரசாங்கம் .

string(1) "1"
Top