Nov 21, 2016

ரயில் விபத்து :133பேர் பலி Featured

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் நகரில் இருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் உள்ள புக்ராயன் அருகே இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது.


மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலம் வழியாக பீகார் மாநில தலைநகர் பாட்னா நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த

இந்தூர்-ராஜேந்திரா நகர் எக்ஸ்பிரஸ் ரயில், கான்பூர் நகரில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புக்ரயான் என்ற இடத்தில் தண்டவாளத்தைவிட்டு விலகிச்சென்று, தடம்புரண்டது.

பலியானோர் குடும்பங்களுக்கு இழப்பீடாக தலா மூன்றரை இலட்சம் மற்றும் படுகாயமைந்தவர்கள் மருத்துவ செலவுக்கு தலா 50 ஆயிரம் வழங்கப்படும் என  ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநில அரசின் சார்பில் இவ்விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு இழப்பீடாக தலா ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அம்மாநில முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.

மேலும், படுகாயமடைந்தவர்கள் மருத்துவ செலவுக்கு தலா 50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

string(1) "1"
Top